ஜனகராஜ்
வெளிநாட்டு தயாரிப்பான விலை உயர்ந்த
கலர் டை பாட்டிலை திறந்தார். கிளவுஸ் அணிந்து
கொண்டு முடிகளைப் பிரித்து கம்பிகளில் பூசத் தொடங்கினார்.
“போதுங்க”
செல்லமாகக் கடிந்து கொண்டாள் மனைவி கோமதி. “எத்தனை பணம் செலவாகுது , நேரம் வீணாகுது
, பேரக்குழந்தை பிறந்தாச்சு , இப்போ இதெல்லாம்
தேவைதானா” என்றாள்.
”மனசு
இளமையா இருக்கணும்னு சொல்றோம் , தோற்றமும் இளமையா இருக்க வேண்டாமா?” சிரித்துக் கொண்டே கிருதா , மீசையை மறக்காமல் டை
அடித்தார் . புருவத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.
குளித்து
டிபன் சாப்பிடும்போது , தொடர்ந்தார் , “வீட்டை விட்டு வெளில இறங்கினாலே டார்ச்சர்தான்
. பெரிசுன்னு கூப்பிடாத குறைதான் . ஏளனமா லுக் விடறது , நக்கல்ஸ் , கிண்டல் அடிக்கறது
, இப்பல்லாம் வயசை பார்த்து ஏமாத்தவும் ஆரம்பிச்சுட்டாங்க..”
கோமதி
கொண்டு வந்த சட்டையைப் பார்த்துவிட்டு , “அரை கை சட்டை , இது வேண்டாம் , நீல கட்டம்
போட்ட முழு கை சட்டை குடு” என்றார். முதியோர்
உதவி மையம் , வாட்ஸ் அப் க்ரூப்புகளிலிருந்து தூர ஓடுபவர்.
அவசரமாக
பஸ் பிடித்து ரயில் நிலையத்துக்கு சென்ற அவர் , கவுன்டரில் தாழ்ந்த குரலில் “கோயம்புத்தூருக்கு சீனியர் சிட்டிசன் டிக்கட் குடுங்க”
என்றவர், ‘டை அடிச்சுக்க பணம் தாராளமா செலவழிப்பீங்க
, ரயில்ல மட்டும் கன்செஷன் டிக்கட், அதை வாங்க தனி க்யூ கேக்குது’ என்று கவுன்டர் பெண் முணுமுணுப்பதைக் கவனிக்கத் தவறவில்லை.
கோபத்தில் பாக்கி சில்லறை வாங்க மறந்தது கோயம்புத்தூரில் ஞாபகம் வந்தது.
*****
No comments:
Post a Comment